பீஹாரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகிலேயே சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் மாநிலம் பாட்னா காந்தி மைதானம் பகுதியை சேர்ந்த சோனு ராய் (20) என்பவர், பாட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்த 13 வயது சிறுமியின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்துள்ளார்.
பின்னர் சிறுமியை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு தூக்கி சென்று கற்பழித்து விட்டு ஓடி விட்டார். இதனால் நிலைகுழைந்த அந்த சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் காந்தி மைதானம் காவல் நிலையம் அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சோனு ராயை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment