தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் தள்ளி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களும் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. முக்கியமாக தமிழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகளை தள்ளி வைத்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் இன்று தேர்விற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மேலும், இது குறித்து வேறு எந்த இணையதள அட்டவணைகளையும் நம்ப வேண்டாம் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும் அளித்துள்ளது
No comments:
Post a Comment