நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும்' என்று கர்நாடசு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனி நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 3 வாரத்தில் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த பின்னர் 8 வாரங்களுக்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதிகள் ஜூலை மாதம் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், கடந்த 18ஆம் தேதி, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ’நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் தவறு உள்ளதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அரிஸ்டாடில் இன்று பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதில், “கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்து அளித்த தீர்ப்பில், பல்வேறு கணித பிழைகள் உள்ளன. எனவே குன்ஹா தீர்ப்பை நிலைநாட்டி, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment