சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் பிரிட்டீஷ் பாதிரியாருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரத்தை அடுத்த சின்னம்மாள்புரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் உள்ளனர். இந்த காப்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ஜொனாதன் ராபின்சன் (73) என்பவர் நடத்தி வந்தார்.
ராபின்சன் அவ்வப்போது இந்தியாவுக்கு வருவாராம். அப்போது இந்த காப்பத்தில் இருந்து ஏதாவது ஒரு சிறுவனை அழைத்துச் சென்று அவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜானதன் ராபின்சன் இந்த காப்பகத்திற்கு வந்தார். காப்பகத்தில் இருந்த 15 வயது சிறுவனை அவர் அழைத்து சென்றுள்ளார். ஏப்ரல் 13ம் தேதி சிறுவனை, டெல்லிக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் வைத்து அவனிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து ஒரிசா, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அங்கும் அவனிடம் தவறாக நடந்தாராம். பாதிக்கப்பட்ட சிறுவன் மூலம் இந்த விவகாரம் பெங்களூரில் உள்ள ஜஸ்டிஸ் அன்டு கேர் என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கு தெரிய வந்தது. அந்த அமைப்பினர் இது பற்றிய தகவல்களை சேகரித்து சிறுவனை மீட்டனர்.
தலைமறைவாக இருந்த ராபின்சனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றையதினம், உள்ளூர் பிரமுகர்கள் ராமர் மற்றும் சுடலை ஆகியோர் கொடுத்த, தலா ரூ.50 ஆயிரம் பிணை மூலம் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்று, வழக்கு மீண்டும் நீதிபதி ரஷ்கின்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது. மேலும், இத்தனை வருடங்களாக தலைமறைவாக இருந்ததால், ராபின்சனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார் (புதன்கிழமை). அன்றைய தினம், இந்த மனுவை எதிர்த்து ராபின்சன் தரப்பு வாதம் முன்வைக்கும் என்று தெரிகிறது. மேலும், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும், ராபின்சனுக்கு, நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராபின்சன் தரப்பு தாக்கல் செய்த மனுவும் அன்று விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment