சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது, இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனாம்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனம் என்பவரது மகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இன்று இந்த மாணவி மாயமானார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் இந்த மாணவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜனார்த்தனன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியை தேடி வருகின்றனர்.
இதற்கு முன்பாக, இந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லும் போதும், வகுப்பு முடித்து வீட்டிற்கு வரும்போதும் தினமும் மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்து வருவதாகவும் இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் ஏற்கனவே இவரது தந்தை புகார் செய்துள்ளார். இந்த
மர்ம நபர்கள் தான் பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேக்கின்றனர்.


No comments:
Post a Comment