கத்தீகர்-மலடா பயணிகள் ரயிலில் வைக்கப்பட்டிருந்த 7 வெடிகுண்டுகளை கால்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
பீகார் மாநிலத்திலுள்ள கத்தீகரிலிருந்து, மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே காவல்துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ரயிலில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரயில்பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
பின்னர், கைப்பற்றட்ட குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment