கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சுல்தான் ஆரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் டாக்டர் கமால் அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் முஹம்மது ராவூத்தர் அவர்களின் சகோதரரும், மீரா முகைதீன் அவர்களின் சகலையும், ராஜா என்கிற ஹாஜா நசுருதீன், ஹாஜா மொய்னுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அஸ்ரப் அலி, முஹம்மது ஹனீப் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய ஹாஜி S.M.S. தாவூது அவர்கள் இன்று மாலை துபாயில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment