முதல்வர் ஜெயலலிதா இன்று ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சியில் புதிய தலைமைச்செயலகமாக கட்டப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டு அந்த இடங்களில் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளாக மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அந்த வகையில் சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை அவர் திறந்து வைத்தார்.
இந்த கல்லூரி தமிழகத்தில் தொடங்கப்படும் 20வது அரசு மருத்துவக் கல்லூரியாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில், இந்த கல்லூரி மட்டும் கல்லூரி முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது. மேலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார. இன்று தலைமை செயலகத்தில் பெண்களுக்கு பரிசுப்பெட்டகத்தை அவர்.வழங்கினார்.
அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகத்தில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குழந்தை பராமரிப்புத் துண்டு, உடை, படுக்கை, பாதுகாப்பு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, சோப்பு, சோப்பு பெட்டி, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்கத் தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள பெட்டகம் என 16 வகையான பொருட்கள் உள்ளன.
No comments:
Post a Comment