ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்ந்து வருகிறது. இந்நிலையில் அங்கு இடி மின்னல் தாக்கி 20 பேர் பலியாயினர்.
ஆந்திரா பிரதேச மாநிலம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, பிரகாசம்,நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியது. பிரகாசம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேரும், நெல்லூர் மாவட்டத்தில் ஐந்து பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேரும், குண்டூர் மாவட்டத்தில் இருவரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருவரும் நேற்று மின்னல் தாக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்த 20 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்ந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் நேற்று பெய்த கன மழையால் இடி, மின்னலில் சிக்கி 20 பேர் பலியானதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் மிக பயங்கர சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ள ராகுல் இடி மின்னலில் சிக்கி இத்தனை உயிர்கள் பலியாகியிருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கலையும் தெரவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment