வரி ஏய்ப்பவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என வருமான வரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய அறிவுரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அறிவுரைகள் கடந்த நிதி ஆண்டில் இருந்து நடப்பு நிதி ஆண்டு வரை பொருந்தும். இதை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில், வரி ஏய்ப்பு செய்கிறவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப் படும். சட்டப்படி தேவைப்படுகிறபோது மட்டுமே அவர்களைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். மற்றபடி யாருக்கும், எதற்கும் தெரிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் பற்றி, குறிப்பிட்டு சொல்ல முடியாத, தெளிவில்லாத தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment