வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹூசன் மற்றும் அவரது மனைவி விரைவில் கைது செய்ய டாக்கா காவல்துறையினர் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் தனது மனைவி ஷஹாதத்துடன் வசித்து வரும் ஹூசன். இவர்கள் மீது, இவர்களது வீட்டில் பணிபுரிந்த 11வயதுடைய சிறுமி தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஷகாதத் ஹூசன் வீட்டில் சிறுமி பணிபுரிந்ததும், ஷகாதத் ஹூசன் மற்றும் அவரது மனைவியாலும் துன்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது. சிறுமியின் உடலில் சில இடங்களில் காயம் இருந்ததையடுத்து சிகிச்சைக்காக டாக்காவில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி அளித்த தகவலின்படி புகாரை பதிவு செய்த போலீசார், ஷகாதத் ஹூசன் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால், அவரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்து தப்பித்து விட்டனர். இந்நிலையில் இன்று அவர்களை கைது செய்ய டாக்கா காவல்துறையினர் முயன்று வருவதாகவும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹூசன் 38 டெஸ்ட் போட்டிகளிலும் 51 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment