சென்னை விமான நிலையத்தின் 4 வது நுழைவு வாயிலில் திடீரென கண்ணாடி விழுந்து நொறுங்கியது. அப்பொழுது அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் சிதறி அடித்து ஒடினா். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணாடி துகள்களை அகற்றினர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 53 வது முறையாக இன்று கண்ணாடி விழுந்து விபத்து ஏற்ப்பட்டது. மேலும் கண்ணாடி விழுந்து நொறுங்கியதில் யாருக்கும் எந்த பாதிப்பில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது என்றும். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.
No comments:
Post a Comment