தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கு கோரி அகஸ்டு மாதம் போரட்டம் நடத்தி சிறைக்குச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் பூரண மதுவிலக்குக் கோரி அமைந்தகரையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது மாணவர்களில் சிலர் திடீரென கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினர்
இதையடுத்து தடியடி நடத்திய காவல்துறை, இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய 5 மாணவிகள் உள்பட 15 பேரை கடந்த மாதம் 3ம் தேதி கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களில் 2 பேர் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்தது விட்டனர். மீதமுள்ளவர்கள் ஜாமினில் வெளிவர மறுத்து சிறையிலேயே இருந்தனர்
இந்த நிலையில் மீதமுள்ள 13 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment