இந்தியாவில் பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசிடம் சட்ட ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது. இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்டகால கோரிக்கை. இதையடுத்து இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் இது தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துக்கள் கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சட்ட ஆணையம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை ஆணையத்தின் தலைவர் ஏ.பி.ஷா, சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இன்று தாக்கல் செய்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளில், பயங்கரவாதத்தைத் தவிர எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை ரத்து செய்யலாம்; இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் எதிர்த்ததாகவும் தூக்கு தண்டனையை ரத்து செய்வது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எனவும் அவர்கள் வாதிட்டதாகவும் கூறப்படுகிறது. சட்ட ஆணையத்தின் இப்பரிந்துரையானது இந்திய அளவில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
No comments:
Post a Comment