இருப்பிடத்தை இந்தியா கண்டறிந்ததால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ உதவியுடன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது இடத்தை மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளான். மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் நீண்டகாலமாக இந்தியாவால் தேடப்பட்டு வருகிறான்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வருவது ஆதாரப்பூர்வமாக வெளியானது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாவூத்தின் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்லும் ஆவணங்கள் பாகிஸ்தான் முகவரியில் இருந்தது வெளியானது. இந்த சம்பவம் தாவூத்துக்கும், அவனுக்கு துணை போகும் பாகிஸ்தான் அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருந்து வேறு இடத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், ஐ.எஸ்.,ஐ., உளவுப் படையினரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாவூத் மற்றும் அவனது குடும்பத்தினரை கராச்சியில் இருந்து மாற்று இடத்திற்கு மாறி செல்ல பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உதவி செய்துள்ளனர். வடக்கு பாகிஸ்தானில் உள்ள முர்ரே என்ற பகுதிக்கு தாவூத் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இவனது மனைவி முஜாகிதீன் ஷாயிக், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மகூருக், மெக்ரீன், மாசியா, ஆகியோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment