சென்னை உள்பட பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் இன்று மாற்றுத் திறனாளிகள் அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினார்கள்.
திமுக ஆட்சியின் போது மாற்று திறனாளிகளுக்காக பல நலத்திட்டங்கள், சலுகைகள் அரசு வழங்கியது. அதன்பின் வந்த அதிமுக அரசும் சலுகைகள் வழங்கி வந்தது. இந்த நிலையில் திடீரென மாற்று திறனாளிகளை பராமரிக்க யாரும் இல்லை என்றால் தான் அவர்களுக்கு உதவி தொகை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாங்கள் அநாதை என்றால் தான் உதவித்தொகை தருவேன் என்பது எந்த விதத்தில் நியாயம் என மாற்றுதிறனாளிகளின் கேட்டு வருகிறார்கள். மேலும். தங்களுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாற்று திறனாளிகள் அரசாணையை கொளுத்தும் போராட்டத்தை நடத்தினர். வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதி மாற்றுதிறனாளிகள் திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கும் அதிகமான மாற்று திறனாளிகள் இதில் கலந்துக்கொண்டு அரசாணையை வாபஸ் வாங்கு என அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வேலூர், அரக்கோணம் போன்ற பகுதிகளிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்களில் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
No comments:
Post a Comment