மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு உறுதிமொழியையே அடுத்த வாசகமாக வெளியிட்டுள்ளது பாமக. சட்டசபைத் தேர்தலுக்கு படு வேகமாக தயாராகி வருகிறது பாமக. தனது பலமான பகுதிகளை மேலும் பலமாக்குவதோடு, பலவீனமான ஏரியாக்களை பலமாக்கும் முயற்சிகளிலும் அது ஈடுபட்டுள்ளது. மண்டல மாநாடுகள், ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தல் என்று வாக்கு வங்கியைப் பலப்படுத்தி வருகிறது பாமக.
"முதல்வர்" அன்புமணி பாமக தனது முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவித்து அவரது தலைமையில் களப் பணியாற்றி வருகிறது. டாக்டர் ராமதாஸை விட அன்புமணியே தற்போது பாமகவில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.
அன்புமணியின் சூறாவளி பிரசாரம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி படு தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாமகவின் பலமான வாக்கு வங்கி உள்ள பகுதிகளுக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார். முக்கியப் பிரச்சினைகளில் அடிக்கடி அறிக்கை விடுகிறார்.
மாற்றம், முன்னேற்றம் இதுதவிர சமூக வலைதளங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சியையும் பாமக சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமானது பாமக வெளியிட்ட மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகம்தான். பலர் இதே பாணியில் தாங்களும் உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் (சிலர் கேலியாகவும்).
அடுத்த வாசகம் ரெடி இந்த நிலையில் தனது அடுத்த வாசகத்தை வெளியிட்டுள்ளது பாமக. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதே அந்த புதிய வாசகம்.
மது விலக்கு ஆட்சிக்கு வந்த முதல் நாள் போடும் முதல் கையெழுத்து மது விலக்கு குறித்தே என்பதை விளக்குகிறது இந்த வாசகம். இந்த புதிய வாசகத்தை டாக்டர் அன்புமணி தனது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றிலும் பிரமோட் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment