மது ஒழிப்புக்காக போராடி உயிர் நீத்த சசி பெருமாளின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மது ஒழிப்புக்காக போராடி உயிர் நீத்த காந்தியவாதி சசி பெருமாளின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி உயிரிழந்த சசிபெருமாளின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். அவரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 4ம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment