பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது.
நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை இன்றைய வர்த்தக நேர முடிவுப்படி 43.96 டாலராக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாநில வரிகளைப் பொருத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.02.03 குறைந்து, ரூ.61.46 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் குறைந்து ரூ.45.56 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு இன்று (31-08-2015) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment