Latest News

டல்லாஸ் நகரில் வசிக்கும் தமிழரா நீங்கள்?: அப்ப, இந்த செய்தி உங்களுக்கு தான்


டல்லாஸ் தமிழ் மன்றம்" என்ற அமைப்பு பல ஒருமித்தக் கருத்து கொண்ட நண்பர்களாலும், பெரும் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்டு லாப நோக்கமற்ற, மத சார்பற்ற தொண்டு நிறுவனமாக (non-profit organization) பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கமானது டல்லாஸ் மாநகரிலும், இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சக தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டுதல், தமிழர் மொழி, கலாச்சாரத்தையும் மற்றும் மரபுகளையும் பேணி காத்தல் ஆகும்.

புலம் பெயர்ந்து வந்து வாழ்பவர்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன. உதவிகள் தேவைப்படுகின்றன. குடியுரிமை (Immigration), பிரச்சனைகளுக்கான ஆலோசனை (counseling), இங்கு வருகை தரும் பெற்றோர்களுக்கான மருத்துவம் மற்றும் காப்பீடு (visiting parents medical & insurance), டல்லாஸ் நகருக்கு சமீபத்தில் குடிபெயர்ந்தோர்க்குத் தேவையான தகவல்கள் (local realty help), சிறந்த பள்ளி பற்றி விபரம் அறிய (find school / after school help) போன்ற பல்வேறு தளங்களில் சரியான உதவிகளைச் செய்ய முகாம்களையும், பயிற்சிப் பட்டறைகளையும், உதவி தொலைபேசி எண்களையும் (Help Lines) ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நீண்ட நாள் திட்டமாக அனைத்து வசதிகள் கொண்ட ஒரு சமுதாயக் கூடம் (Community Center) அமைத்தல் என்ற குறிக்கோளும் உள்ளது. உங்கள் ஒவ்வொருவரையும் டல்லாஸ் தமிழ் மன்றம் அன்போடு அழைக்கிறது. மேலும் விரிவான தகவல்களை www.dallastamilmanram.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து பார்க்கவும். டல்லாஸ் தமிழ் மன்றம் தொடர்பான அனைத்து கேள்விகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு dallastamilmanram@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.