Latest News

  

நடுநோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயற்சித்த இளைஞர்... நாகை அருகே பரபரப்பு


நாகை: நாகை அருகே நடுரோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் மேலத்தெருவில் வசிப்பவர் மலர். இவர் சீர்காழியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கீராநல்லூரை சேர்ந்த அன்புநாதன் என்பவர் கடந்த ஒரு வருடமா்க காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை கலலூரி முடிந்து மலர் வீடு திரும்பி கொண்டிருந்தார். கீராநல்லூர் வெல்டிங் பட்டறை அருகே அன்புநாதன் மலரை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மலர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்புநாதன் மறைத்து வைத்திருந்த தாலியை மலர் கழுத்தில் கட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மலர், உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அன்புநாதனின் தம்பிகள் அருள்மணி, ஆனந்த் ஆகியோரும் அன்புநாதனுடன் சேர்ந்து மலரை வழிமறித்து தாக்கினர். இதனால் செய்தவறியாது திகைத்த மலர் பயத்தில் அலறினார். அவரது அலறல் சததத்தை கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த அன்புநாதனும், அவரது தம்பிகளும் அஙகிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மலர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புநாதன், ஆனந்த் இருவரையும் கைது செய்தனர். மற்றொரு தம்பியான அருள்மணி தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் இளம்பெண் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.