அல்லாஹ்வின் நல்லாடியார்களே அன்பார்ந்த சகோதரர்களே ( அஸ்ஸலாமு அலைக்கும் – (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )
அன்பு சகோதரர்களே உங்கள் ரூம்களை நோக்கி TIYA நிர்வாகிகள் இன்று முதல் வருகின்றனர் உங்களின் பித்ரா தொகையை நமது மஹல்லா நிர்வாகிகளிடம் வழங்கிடுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
இறைவனின் பேரருளால் நாம் (2015 / 1436 ) புனித ரமழான் மாததினை அடைந்துவிட்டோம் இம்மாதத்தில் நம்மால் இயன்ற அளவு நம்மைப்படைத்தவனை நெருங்கவும், நம்மை பாங்களிலிருந்து தூய்மையாக்கிக் கொள்ளவும் பகலில் நோன்பிருத்தல், அதிகமாக குர் ஆன் ஒதுதல், இரவில் உறக்கம் துறந்து தொழுகையில் ஈடுபடுதல், போன்ற் அனைத்து வணக்கங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோம் அல்லாஹ் துணையிருப்பானாக்.
அமீரகத்திலும் தாயகத்திலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நமது மஹல்லாவின் நலன்களை கருதி நல்ல பல திட்டங்களை வகுத்து சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்மென்பதை தாங்கள் அனைவரும் அறிந்த்தே அல்ஹம்துலில்லாஹ்!
ஒவ்வொரு ஆண்டும் ரமழன் மாதமும் அமீரகம் வாழும் நமது மேலத்தெரு மஹல்லா சகோதர்ர்களிடம் வசூலித்த பித்ரா தொகையினை நமது மஹல்லாவில்யுள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு முறையாக் வினியோகம் செய்து வருகிறோம் மென்பதை தங்கள் அனைவரும் அரிவீர்கள் எப்பொழுதும் போல் இந்த வருட ரமளான் மாத்திற்கான பித்ரா தொகையை வசூல் செய்து நமது மஹல்லா வாசிகளுக்கு வினியோகம் செய்ய இருப்பதாள் உங்களின் பித்ரா தொகையை நமது TIYA நிர்வாகிகள் உங்கள் ரூம்களை நோக்கி வருகிறார்கள் அவர்களிடம் தாமதம் இன்றி உடன் தங்களின் பித்ரா தொகையை செலுத்தினால் தாயகத்திலுள்ள நமது மஹல்லாவில்யுள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு முன் கூட்டியே வினியோகம் செய்வதற்க்கு வசதியாக இருக்குமென்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள் A வின் இனிய ரமலான் வாழ்த்துகள்
No comments:
Post a Comment