அசோக சக்கரவர்த்தி மரங்களை மட்டும் நடவில்லை, வழிபோக்கர்களுக்கு நெடுஞ்சாலைகளில் மருத்துவமனைகள் கட்டியபோது, அங்கெல்லாம் புதினாக் கீரைகளையும் பயிரிட செய்தாராம். புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இது நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள மூலிகையும் ஆகும். நம் மண்ணில் இருந்து கிடைக்கும் பல பச்சை உணவுகளில், புதினா மிக சிறந்த மருத்துவ உணவாக கருதப்படுகிறது. இனி, புதினாவில் இருக்கும் மருத்துவ ஆரோக்கிய நலன்களை குறித்துப் பார்க்கலாம்...
செரிமானத்தை சரி செய்யும் செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். இது, உங்கள் செரிமானத்தை சரி செய்து, பசியை தூண்டும் பண்புடையது.
பித்தத்தைக் கட்டுப்படுத்தும் புதினாவின் மற்றுமொரு சிறந்த குணம் என்னவெனில், இது பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது.
கொழுப்பைக் கரைக்கும் புதினா உங்கள் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வு புதினா, பற்களின் உறுதியை மேம்படுத்தி, பல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
இருமலை குணம் செய்யும் வறட்டு இருமலை இருப்பவர்களுக்கு புதினா ஓர் நற்மருந்தாக பயனளிக்கிறது. புதினா டீ அல்லது புதினா சாற்றைக் குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை தாமதமாக மாதவிடாய் வெளிவரும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு புதினா ஓர் நல்ல தீர்வு தரும். புதினாவைக் காயவைத்துப் பொடியாக செய்து ஒன்று முதல் மூன்று வேளைகள் தேனில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலனடையலாம்.
வாய் நாற்றத்தைப் போக்கும் புதினா ஓர் சிறந்த வாய் துர்நாற்ற நிவாரணியாக செயல்படுகிறது. காலை வேளைகளில் புதினாவை பச்சை தண்ணீரில் கழுவி, மென்று வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் முழுமையாக சரியாகிவிடும்.
வாந்தியைத் தடுக்கும் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் போது, புதினாவை மென்று அதன் சாற்றை பருகினாலே, குமட்டல், வாந்தி போன்றவை நின்றுவிடும்.
நரம்பு தளர்ச்சி நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் தன்மை புதினாவிற்கு உண்டு, கை கால் இழப்புகளுக்கும் கூட புதினா தீர்வளிக்கும் என்று கூறப்படுகிறது.
மூச்சு திணறல் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொண்டால், மூச்சுத் திணறலை பிரச்சனைக்கு நல்லதோர் தீர்வுக் காணலாம்.
சிறுநீர் பிரச்சனை சிறுநீர் பிரச்சனைகளுக்கும் கூட புதினா நல்ல தீர்வு தரும்.
ஆஸ்துமா ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் புதினாவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment