வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் இந்தி- அமெரிக்கரும் லூசியானா மாகாண ஆளுநருமான பாபி ஜிண்டால் போட்டியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் 3வது முறையாக போட்டியிட இயலாது.
இதனால் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால் போட்டியிடலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது அங்குள்ள லூசியானா மாகாணத்தின் ஆளுநராக அவர் உள்ளார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது முடிவை இன்று வெளியிடுவேன் என பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment