திருவனந்தபுரம்: கேரளாவில் காலா அஸார் எனப்படும் கருங் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 3 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மூன்று பேரில் ஒருவர் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் ஒருவரும், மலப்புரம் மாவட்டத்தில் இருவரும் இந்த காலா அஸாரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலா அஸார் அல்லது கருங்காய்ச்சலானது இதுவரை தென்னிந்தியாவில் யாரையும் பாதித்தது இல்லை. வழக்கமாக இது இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில்தான் வந்துள்ளது. ஆனால் இப்போது தென்னிந்தியாவில் இது பரவியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பருவ மழைக்காலத்தில் கேரளாவில் விதம் விதமான நோய்கள் பரவுவது சகஜம்தான். ஆனால் இந்த முறை அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி அமர் பெட்டில் கூறியுள்ளார். மேலும் நோய்கள் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மலேரியா, டெங்கு, எலிக் காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. அது என்ன காலா அஸார்?
கருங்காய்ச்சல் எனப்பபடும் காலா அஸார் மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்று. மலேரியாவுக்கு அடுத்து முக்கியமான காய்ச்சலாகும் இது. கொசுக்கள் மூலம் மலேரியா பரவுவது போலத்தான் இந்த காலா அஸாரும் பரவுகிறது. இது பெண் கொசுக்களால் பரவும். காலா அஸார் பாதிப்பு வந்தால், கல்லீரல், கணையம், எலும்பு மஜ்ஜை ஆகியவை கடு்மையாக பாதிக்கப்படும். சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் எடை குறைந்து காய்ச்சல் அதிகரித்து மரணத்தை சந்திக்க நேரிடும். தொடர் காய்ச்சல், பசி குறைவு, எடைக் குறைவு, உடல் பலவீனம், கணையம் வீங்குவது, கல்லீரல் வீக்கம், தோல் சுருங்குவது, உலர்வது, அனீமியா ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும். காலா அஸாரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment