போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் தொண்டர்களுக்கு கடும் தண்டனை விதிப்பேதோடு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்களுக்கும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்ததைஙக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. போராட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களை சேதம் விளைவிப்போருக்கு தண்டனையைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதில், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் வலுவான மாற்றம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதுதொடர்பான கருத்துக்களை ஜூலை 20 ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சட்டத்திருத்தத்தின் வரைவு நகல் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தினால், அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். பேருந்துகள், ரயில்கள், அரசு கட்டடங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். பொதுச் சொதுச் சொத்துக்களுக்கு தீவைத்தாலோ அல்லது வெடிவைத்து சேதம் விளைவித்தாலோ தற்போது இருந்து வரும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதத்துடன் பத்தாண்டுகளாக அதிகரிக்கப்படும். மேலும் சேதம் விளைவிக்கும் தொண்டர்களின அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தண்டனை வழங்கும் வகை சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் மற்றும் தண்டனை பெறும் நபரை விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தால் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. இந்தத் திருத்தங்களைக் கொண்டுவர ஏதுவாக, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம்-1984 மாற்றி அமைக்கப்படும்.
No comments:
Post a Comment