லை, அறிவியல் படிப்புகளில் சேர, மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுஉள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 முடித்தவுடன், இன்ஜி., படிப்பில் சேர, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டி வந்தனர்; சமீபகாலமாக, கலை படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டில், ஒருசில படிப்புகளில் சேர, நன்கு படிக்கும் மாணவ, மாணவியரே, கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பி.எஸ்சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, மவுசு ஏற்பட்டுள்ளது.
தேர்வு முடிவு வெளிவரும் முன்பே, அட்மிஷன் நடந்து வருகிறது. இதுகுறித்து, கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள், தற்போது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பியுள்ளன. இவற்றை படிப்பதால், மூன்றே ஆண்டுகளில், வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முடியும். இந்த ஆண்டில், பி.எஸ்சி., கணிதம் படிப்பின் மீது, அதிக ஆர்வம் உள்ளது.
தனியார் பள்ளிகள் முதல், அரசு பள்ளிகள் வரை, ஏராளமான ஆசிரியர் வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட, கணிதம் பாடம் எடுக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
மாணவர் சேர்க்கைஇதே போல், ஐ.டி., நிறுவனங்களும், கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஆசிரியர் பணிக்கு செல்வோரின் அடுத்த சாய்ஸாக, பி.ஏ., ஆங்கிலம் உள்ளது; இப்படிப்புகளில், மாணவர்களை விடவும், மாணவியர் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தேர்வு முடிவ வெளிவரும் முன்பே, இப்பாடங்களில், சேர்க்கையும் நடந்துள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜி., கல்லூரிகளில் சேர, ’கட் – ஆப்’ மதிப்பெண் கிடைக்காது என, தெரிந்த பலரும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளை நாட துவங்கி உள்ளனர். ஆடிட்டராக, சி.ஏ., படிக்க வேண்டும் என, விரும்புபவர், பி.காம்., படிப்பில் சேர்கின்றனர். கடந்த ஆண்டுகளில் மவுசு இருந்த, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட நுட்பமான படிப்புகளில், மாணவர் சேர்க்கை மிக அரிதாக உள்ளது.
No comments:
Post a Comment