இஸ்லாமியர் என்பதால் சல்மான் கானுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறி பாஜக தலைவர் சாத்வி பிராச்சி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பாஜக தலைவர் சாத்வி பிராச்சி நடிகர் சல்மான் கான் மூஸ்லிம் என்பதால் மட்டுமே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். உத்திரபிரேச மாநிலம் மீரட்டில் செய்தியாளரிடம் இதை தெரிவித்த அவர் லட்சகணக்கான ஏழை இந்துக்கள் ஜாமீன் கிடைக்காமல் சிறைகளில் வாடுவதாக கூறினார். மது போதையில் கார் ஓட்டி நடைபாதையில் உறங்கி கிடந்தவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு மற்றும் ஜாமீன் மனுக்களை அன்றைய தினமே விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் முதலில் 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் நேற்று சல்மான்கான் தண்டணையை நிறுத்தி வைத்ததுடன் அவரது ஜாமீனை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ள நிலையில் சாத்வி பிராச்சியம் தன் பங்குக்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment