‘சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பில்லாத சூழலை உணர்கிறார்கள்’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
மூத்த பத்திரிகையாளரான மறைந்த வினோத் மேத்தாவுக்கு, ஜி.கே.ரெட்டி நினைவு தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வினோத் மேத்தாவின் மனைவி சுமிதாவிடம் விருதை வழங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இதில் பேசிய சோனியா காந்தி, ‘நாட்டின் தற்போதைய நிலையில், எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். சமூகத்தின் மதச்சார்ப்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலருக்காக தனிநபரின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. வினோத் மேத்தா, மத தீவிரவாதத்தையும், சமூக அநீதிக்கும் எதிராக குரல் கொடுத்தவர். அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்’ என்றார்.
No comments:
Post a Comment