மத்திய அரசின், நிலம் கையகப்படுத்தும் மசோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி ராம் லீலா மைதானத்தில் ராகுல்காந்தி தலைமையில் விவசாயிகள் பேரணி நடக்கிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டு உள்ளனர் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் மன்மோகன் சிங்கிற்கு ஏர்கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. பேரணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், மோடி அவர்கள் பிரசாரத்தின் போது விவசாயிகளுக்காக பணியாற்றப்போவதாக கூறினார், ஆனால் அது நடைபெறவில்லை.
தற்போது மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிகக இங்கு கூடியுள்ளோம். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுடன், விவசாயிகளுக்காக எப்போதுமே பணியாற்றி உள்ளது காங்கிரஸ் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து இங்கு கூடியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் என்று கூறினார்.
மோடி அரசு கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் மசோதா கடந்த 2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரானது என்று கூறினார். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் தலைமையில் நடந்த விவசாயிகள் பேரணி வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment