மதுரை மாவட்டத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியவிருது பெற்றவர் எம்.அப்துல் ரசாக். மதுரை பீ.பீ.குளம் நபிகள் நாயகம் தெருவில் உள்ள சிறு வீட்டில் வசித்து வருகிறார். 45 வயதான இவர், ஒரு எலக்ட்ரீசியன். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வமுடையவர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்த இவர், 7வது வரைதான் படித்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அவரிடம் பேசுகையில், ‘நான் சிறுவயதில் படிக்கும் போது பல மன்னர்கள். அறிஞர்கள், தலைவர்கள் போன்றோரின் வரலாற்றினை படிக்கின்றோம். அதுபோல் இந்த மண்ணில் பிறந்தோர் ஏதாவது சாதிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நமக்கு பின்னால் நம் வரலாற்றினை பலரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தேன். அதே சமயம் வறுமையும் என்னை தொல்லை செய்தது. ஆனாலும் அதையும் மீறி பல கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தேன்.
முதலில் சாதம் வடிக்கும் பாத்திரம், அதாவது சாதம் வெந்தவுடன் கீழே உள்ள பைப்பை திறந்தால் போதும் சாதத்தின் சூடான நீர்’ வெளியேறி விடும். இது தான் என்னுடைய முதல் கண்டுபிடிப்பு. இதை எளிமையான முறையில் உபயோகிக்கலாம். இதனை கண்டுபிடிக்க காரணம் என் மனைவிதான். எளிமையாக சாப்பாடு தயாரிக்க கண்டுபிடித்தது.
அடுத்து ஆட்டோ, டூவிலர் டயர் திருடுபோவதை தடுக்க 200 ரூபாயில் சேப்டி லாக் ஒன்றை கண்டுபிடித்தேன். இது என்னவென்றால் டயரின் மேற்பரப்பில் உள்ள நட்டுகள் கழட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதனால்தான் எளிதாக திருடுகின்றனர். இந்த சேப்டி லாக் அதன் மேல் தட்டை அடைத்துவிடும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது’ என்கிறார்.
11113637_803345103083111_336557406561176161_nஇதுபோல் மொபைல் போனுடன் கூடிய சார்ஜர் என எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர். முதல் கண்டுபிடிப்பிற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் தேசியவிருது பெற்றார். அப்போது டெல்லியில் 5 நாட்கள் தங்கியிருந்த போது கடும் குளிர் அவரை வாட்டியது. இதுபோல் தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று உணர்ந்து ஊர் திரும்பியவுடன் “பனி கோட்” ஒன்றையும் கண்டுபிடித்து உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் டபுள்-டக்கர் மின்விசிறி, மின்விசிறியில் லைட் எரிய வைத்தல் போன்ற அசத்தலுடன் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.
இப்போது சமையல் எரிவாயு மிச்சபடுத்த மரத்தூள் கொண்டு விறகுக்கு பதிலாக ஒன்றை உருவாக்கியுள்ளார் ரசாக். இதனை கொண்டு சமையல் செய்தால் 1 மணி நேரம் வரை எரியுமாம். இதன் அளவு 3 செ.மீட்டராம். இதனை எளிதாக வெளியூர் கொண்டு சென்று உபயோகிக்கலாம். இதனுடைய விலை 5 ரூபாய்தான். இதனால் காற்று மாசுபடாது. அவ்வளவு புகையும் வராது என்று இவரின் கண்டுப்பிடிப்புகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது
No comments:
Post a Comment