கூகுள் மற்றும் தைவானைச் சேர்ந்த அசுஸ் நிறுவனம் பென்டிரைவ் போன்ற ஸ்டிக்கில் இருக்கும் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளன.
கூகுள் நிறுவனம் தைவானைச் சேர்ந்த அசுஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கம்ப்யூட்டரை கைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்டது. ‘கம்ப்யூட்டர் ஆன் எ ஸ்டிக்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அது பார்க்க பென்ட்ரைவ் போன்று அதே அளவில் தான் உள்ளது.
ஆனால் அது பென்டிரைவ் அல்ல கம்ப்யூட்டர். அவ்ளோ பெரிய கம்ப்யூட்டரை ஒரு குட்டி ஸ்டிக்கில் அடக்கிய கூகுள் அந்த ஸ்டிக்கை நீங்கள் டிவி அல்லது வேறு டிஸ்பிளேயில் சொருகினால் அது கம்ப்யூட்டராகிவிடும். டெஸ்க்டாப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது இனி கடினமே இல்லை. அதான் ஸ்டிக் வந்துவிட்டதே. பாக்கெட்டில் போட்டு எடுத்துச் செல்லுங்கள், வேண்டும் என்ற இடத்தில் டிஸ்பிளேயில் சொருகி கம்ப்யூட்டரை பயன்படுத்துங்கள்.
இந்த அசுஸ் க்ரோம்பிட் ஸ்டிக் கம்ப்யூட்டர் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது ரூ.6 ஆயிரத்து 300க்கும் குறைவாக கிடைக்கும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது, இந்த ஸ்டிக் கம்ப்யூட்டர் பற்றி கூகுள் வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் சீன எலக்ட்ரானிக் நிறுவனங்களான ஹயர் மற்றும் ஹிசென்சுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டுள்ள தனது க்ரோம்புக் லேப்டாப்கள் ரூ. 9 ஆயிரத்து 300க்கு விற்பனை செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
ஹெயர் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டுள்ள ஹெயர் கம்ப்யூட்டர் அமேசான் மூலமாகவும், ஹிசென்ஸ் கம்ப்யூட்டர் வால்மார்ட் மூலமாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment