Latest News

மின் வாரியத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடி


தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, தெரிகிறது.

தமிழ்நாடு மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்; மின் தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்படுகிறது. மின் கட்டணம் வசூலித்தல், அரசு மானியம் போன்றவற்றின் மூலம், மின் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், எரிபொருள், மின் தொடரமைப்பு, பழுது மற்றும் பராமரிப்பு, ஊழியர் சம்பளம் உள்ளிட்டவைக்கு, மின் வாரியம் செலவு செய்கிறது. வருவாயை விட செலவு அதிகம் இருப்பதால், பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம், 9.50 – 13.25 சதவீத வட்டிக்கு கடன் வாங்குகிறது. அதன்படி, 2012 மார்ச் வரை, மின் வாரிய கடன், 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. பின், 16,650 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது. 2013 மார்ச் நிலவரப்படி, கடன், 46,650 கோடி ரூபாயாக இருந்தது. இதில், மின் வாரியம், 6,650 கோடி ரூபாயை, திருப்பி செலுத்தியதை அடுத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில், கடன் இருந்தது.

கடன் பத்திரம், 7,000 கோடி;

ரூரல் எலக்ட்ரிபிகேஷன், 2,000 கோடி; பவர் பைனான்ஸ், 5,700 கோடி; தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனம், 6,000 கோடி; வங்கிகள், 8,500 கோடி ரூபாய் என, 2014ல், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புது கடன் வாங்கியுள்ளது. அதனால், 2014 மார்ச் நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன், 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டில், கூடுதலாக, 16 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றதை அடுத்து, 2015 மார்ச் முடிய, கடன் அளவு, 86 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், மின் வாரியத்தின் கடன், விரைவில், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, தெரிகிறது.

ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகும்:

எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2012 – 8,500 கோடி; 2013 – 1,000 கோடி (விவசாயம், குடிசை); 2014 – 5,200 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டில், மின் கட்டணம் உயர்த்தியதன் மூலம், மின் வாரியத்திற்கு, கூடுதலாக, 14,700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இருப்பினும், கடன் அளவு அதிகரித்து வருவதற்கு, அரசியல் நெருக்கடி காரணமாக, தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதே முக்கிய காரணம்.தற்போது, மின் வாரிய தலைவர் சாய்குமார், அதிக விலை மின்சாரம் வாங்குவதை நிறுத்தியுள்ளார். இரண்டு ஆண்டு, இதே நிலை நீடித்தால், 20 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

கடன் வழங்கிய முக்கிய நிறுவனங்கள் (ரூ.கோடியில்)
ஹட்கோ-1,000
ரூரல் எலக்ட்ரிபிகேஷன்-11,000
பவர் பைனான்ஸ்-12,000
தமிழ்நாடு மின் விசை-11,700
நபார்டு-1,000
வங்கிகள்-11,150
கடன் பத்திரம்-10,000
எல்.ஐ.சி.,350

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.