வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் இனிப்புகள் வாங்க வசதியாக வந்துள்ளது ஸ்வீட்கானா.காம். டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. நெல்லையில் தலைமை அலுவலகமும் பிற இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்த இணையதளம் துவங்கிய ஒரு மாதத்திற்குள் 1,000க்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளன. முதலில் அல்வாவில் துவங்கி தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பிற இனிப்புகளும் விற்கப்படுகிறது. சர்வதேச ஷிப்பிங் முறை அடுத்த மாதம் துவங்கப்படும். இந்த இணையதளத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கும் இனிப்புகளை சப்ளை செய்கிறார்கள்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த வினோத் என்ற வாலிபர் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து துவங்கியது தான் ஸ்வீட்கானா.காம். அவர்கள் ஆறு பேரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போதில் இருந்தே ஏதாவது சொந்த வியாபாரம் துவங்க வேண்டும் என நினைத்துள்ளனர். இது குறித்து வினோத் கூறுகையில், இந்த இணையதளத்தை டிசைன் செய்ய ஒரு மாதம் தான் ஆனது. ஆனால் இனிப்புகளின் சிறப்புகள் மற்றும் தரத்தை அறிந்து கொள்ள நாங்கள் ஓராண்டு காலமாக பணிபுரிந்தோம். நாங்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் திருநெல்வேலி அல்வா விற்பனையுடன் இணையதளத்தை துவங்கினோம். இவர்களின் தனித்துவமாக இருப்பது எந்த ஊரில் எந்த ஸ்வீட் பிரபலமாக இருக்கிறதோ அதை அந்த ஊரில் இருந்தே ஷிப்பிங் செய்வதுதான். அதனால் தான் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகிறார்கள்.
தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவை மைசூர்பாக், தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பல வகை இனிப்புகளை விற்பனை செய்கிறோம். இந்த சேவை வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவில் இருக்கும் தங்களின் குடும்பத்திற்கு அனுப்ப சுலபமாக உள்ளது.கம்ப்யூட்டர் மவுஸை ஒரு கிளிக் செய்தால் உங்கள் வீட்டு வாசலில் இனிப்புகளை டெலிவரி செய்ய விரும்பி அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment