லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ஏர் ஜெட் விமானி ஒருவர் அனுப்பி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி திடீர் என உடல் நிலை பாதிக்கபட்டது போல் நடித்தார். இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த 5 பேர் மருத்துவர்கள் எனக் கூறி தாமாகவே முன்வந்தனர். பயணியை சோதனை செய்த பிறகு அவர்கள் உடனடியாக விமானியை சந்திக்க வேண்டும் என கூறினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. விமானிக்கு டாக்டர்கள் குழுவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சந்திக்க மறுத்து விட்டார். டாக்டர்கள் என கூறி முனவந்த 5 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. இது விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து விமான பணியாளர்களுக்கும் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை செய்யபட்டு உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை உளவுத்துறை அதிகாரிகள் கடுமையாக மறுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment