ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், முதல்வர் பதவியின் வேலை பளு காரணமாகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், ராஜினாமாவுக்கும் அவ்வளவு ஒற்றுமை. கடந்த முறை தில்லி முதல்வராக பதவியேற்ற 45வது நாளில் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்த கேஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த கேஜ்ரிவால், ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளை கவனிக்க முடியிவல்லை. நான் தில்லி மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். எனவேதான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
புதிய ஒருங்கிணைப்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.
No comments:
Post a Comment