உலகில் முதன்முறையாக பெண்களுக்கான மசூதி ஒன்று அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 1200 மசூதிகளில் பெரும்பாலானவை கடந்த 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angels) மாகாணத்தில் பெண்களுக்கான பிரத்யேக மசூதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்பு யூதர்கள் வழிபாட்டு ஸ்தலமாக விளங்கிய இவ்விடத்தில், தற்போது மிகப்பெரிய மசூதியும் வந்துள்ளது.
இதுகுறித்து அந்த மசூதியை நிறுவிய பெண் உரிமையாளர் கூறுகையில், மற்ற மசூதிகளை போட்டிப்போட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசூதியை கட்டவில்லை என்றும் பெண்களுக்கென ஒரு மசூதி அமைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தான் கட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு வரும் பெண்கள் தாங்கள் அதிகளவில் அமைதியை பெறுவதாக மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment