டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடு என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அசுர பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இத்தேர்தல் முடிவுகள் குறித்து அன்னா ஹசாரே கூறியதாவது :
“இம்முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. மிகப் பெரும் வாக்குறுதிகள் அளித்த மோடி 9 மாதங்களில் ஒன்றும் செய்யவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று வெற்று வார்த்தைகளில் பேசிய பாஜக தொடர்ந்து மக்கள் விரோத ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததன் விளைவே இத்தோல்வி" என கூறியுள்ளார்.
மேலும், கேஜ்ரிவாலின் வெற்றி குறித்து தான் மகிழ்ச்சியுறுவதாகவும் கேஜ்ரிவால் திறமையான சாதுர்யமான மனிதர் என்றும் அன்னா ஹசாரே புகழாரம் சூட்டினார். ஆனால், கேஜ்ரிவால் தன்னுடையை கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் பெறுவதோடு ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அன்னா ஹசாரே கேட்டுக் கொண்டார். கேஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக தன்னோடு போராடியதாலேயே மக்களின் நம்பிக்கையை பெற்றார் என்றும் அன்னா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment