"அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைத்த பெரும் தோல்வி" என்று டெல்லி சட்டசபை முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"இது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். அராஜகவாதிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வி. அரசியல் லாபத்திற்காக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பவர்களுக்கு கிடைத்த தோல்வி" என்று தெரிவித்துள்ளார்.
"நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமில்லை. நாட்டிற்கு இந்த மாற்றமே தேவைப்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் பெரும் வெற்றியை பெற்ற ஆம் ஆத்மிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி தேர்தலில் மம்தா ஆம் ஆத்மிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment