கர்ப்பிணி அம்மா மற்றும் அப்பாவை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்து. அதிர்ஷ்டவசமாக இரண்டு பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் அல்புகுயர் கியூ நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது, குழந்தைகள் இரண்டு பேரும் விளையாடிக் கொண்டிருந்தபோது 3 வயது சிறுவன், தனது தாயாரின் கைப்பையில் ஐ பேடை தேடிகொண்டு இருந்தபோது கைத்துப்பாக்கி கிடைத்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு சிறுவன் விளையாடி கொண்டிருந்தான்.
பின்னர், சிறுவன் விளையாட்டுத்தனமாக 8 மாத நிறைமாத கர்ப்பிணியான தாய் மற்றும் தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, தந்தையின் இடுப்பு பகுதியில் பாய்ந்ததோடு, அருகில் இருந்த தாயாரின் தோள்பட்டையையும் துளைத்தது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தந்தை ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கவனக்குறைவாக இருந்து துப்பாக்க்ச் சூடு நடைபெற காரணமாக இருந்ததாக கூறி பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மை காலமாக அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி 21ஆம் தேதி புளோரிடாவில் 2 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொன்று இறந்தான். அதற்கு முன்பாக முசோரியில் 5 வயது சிறுவன் துப்பாக்கியுடன் விளையாடும்போது வெடித்து குண்டு பாய்ந்ததில் 9 மாத குழந்தை பலியானது. டெட்ராய்ட் நகரில் விளையாட்டாக 4 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் அவளது உறவுக்கார சிறுமி இறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment