நல்லதொரு விசையம் சரியான சிகிச்சையின்றி விபத்தில் உயிரிழப்பவர்களை காப்பாற்றுவது, என்பது நல்ல விசையம் தான் பாராட்டுக்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தொடர்புடைய இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் விரைவில் 1033 என்ற உலகளாவிய நான்கு இலக்கு எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் உட்பட எந்த உதவியானாலும் இந்த எண்ணிற்கு அழைக்கலாம். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நாடு முழுவதற்குமான ஹெல்ப்லைன் எண்ணாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைத்து 24 மணி நேர கால் சென்டர் சேவை உருவாக்கப்பட உள்ளது.
சரியான சிகிச்சையின்றி விபத்தில் உயிரிழப்பவர்களை காப்பாற்றுவது, மரங்கள் விழுந்திருப்பது, சாலைகள் பழுதாயிருப்பது, மற்றும் இது போன்ற தகவல்கள் உடனுக்குடன் தேசிய நெடுஞ்சாலைத்துறையை அடைவதால் சாலைப்பாதுகாப்பு மேம்படும் என்பதற்காகவே இந்த ஹெல்ப் லைன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment