முத்துப்பேட்டை தர்ஹா கலவரத்தில் தனி ஆளாக களத்தில் நின்று கலவரக்காரர்களை விரட்டிய சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட கலவரத்தின்போது 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்கா மீது தாக்குதல் நடத்திய போது தனி ஆளாக இருந்து தனது உயிரையும்
பொருட்படுத்தாமல் கலவரக்காரர்களை விரட்டியடித்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. தர்ஹா கலவரத்திற்க்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்று அனைத்து தரப்பாலும் கண்டன குரல் எழுப்பி வந்த நிலையில் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று விசாரித்த வகையில் மேல்கண்ட செய்தி&
முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட கலவரத்தின்போது 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்கா மீது தாக்குதல் நடத்திய போது தனி ஆளாக இருந்து தனதுஉயிரையும் பொருட்படுத்தாமல் கலவரக்காரர்களை விரட்டியடித்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
தர்ஹா கலவரத்திற்க்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்று அனைத்து தரப்பாலும் கண்டன குரல் எழுப்பி வந்த நிலையில் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று விசாரித்த வகையில் மேல்கண்ட செய்தி உண்மை என்றும், அவர் ஒருவர் மட்டும் தான் தனி ஒரு ஆளாக களத்தில் நின்று கலவரக்காரர்களை விரட்டி அடித்துள்ளார் என்ற செய்தி தர்ஹாவிலிருந்து கிடைத்தது.
அவரது செயலால்தான் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டதுள்ளது.இவரது செயலால் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வன்முறையாளர்களை தனி ஆளாக எதிர்கொண்டு அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ள சாமிநாதன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து பொது நல அமைப்பினரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்து வருகிறார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில் பாதுகாப்பு கவசங்கள் அப்போது என்னிடம் இல்லை. இருந்திருந்தால் இந்த அளவுக்குக் கூட தாக்குதல் நடந்திருக்காமல் தடுத்திருப்பேன் என்றார்.
இவரது இந்த சேவை மென்மேலும் தொடர நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம் . தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தடுப்பது காவல்துறை யின் வேலை என்பதை சாமிநாதன் நிரூபணம் செய்து உள்ளார்அப்பகுதி இஸ்லாமியர்கள் சுவாமி நாதன் அவர்கர்களுக்கு தங்களுடைய ஜாமாத் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்கள்
No comments:
Post a Comment