Latest News

ஊடகங்களுக்கு முக்கியம் நடிகர்கள்தான் - நோக்கியா அல்ல!

தமிழ்நாட்டின் நோக்கியா ஆலை மூடப்படு வது இந்தியாவின் தொழில் முதலீட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.

ஆனால் இதில் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கப்படும் தமிழ் நாட்டில் இவ்வளவு முக் கியத்துவம் வாய்ந்த பிரச்சினை  இது குறித்து தேவைப்படும் அளவுக்கு பெரிதாக எந்தக் கவ லையோ, விவாதமோ நடக்கவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழ் மொழியின் ஊட கங்கள் (செய்தித்தாள், சஞ்சிகைகள், 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி கள் மற்றும் வானொலி) இவ்வளவு பெரிய மாநி லத்தின் தொழில்துறை, தொழிலாளர் வாழ்க் கையை நேரடியாக பாதிக் கும் பிரச்சினை குறித்து எவ்வளவு நேரம் ஒதுக்கி செய்தி வெளியிட்டன என்று நீங்கள் ஆராய்ந் தால் தமிழ்நாட்டின்/ தமிழ் மொழியின் ஊடகத் துறையின் உண்மையான பிரச்சினை என்ன என்று நீங்கள் தெரிந்து கொள் ளலாம்.

குறிப்பாக நடிகர் விஜயின் கத்தி மற்றும் ரஜினிகாந்தின் லிங்கா ஆகிய இரண்டு திரைப் படங்களுக்கு தமிழ் நாட்டு/தமிழ்மொழி ஊடகங்கள் ஒதுக்கிய இடம், நேரத்தை கணக் கிட்டு, இதே ஊடகங்கள் இந்த நோக்கியா ஆலை விவகாரத்துக்கு எவ்வளவு இடம், நேரத்தை ஒதுக் கின என்பதையும் கணக் கிட்டால் இதில் இருக்கும் விபரீதத்தின் ஆழ அக லங்கள் புரியக்கூடும். என்ன காரணம்?

தமிழ்நாட்டு, தமிழ் மொழியின் ஊடகங்களில் ஊடுருவிவிட்ட சுய தணிக்கை முறைதான் இதற்கு உண்மையான காரணம். அரசுக்கு எதி ரான செய்தியைப் போடாதே என்பது தமிழக ஊடகத்துறையின் எழுதப்படாத விதியாகவே இன்று ஆகிவிட்டது.

அப்படியானால் எதைச் செய்தியாக்குவது? சினிமாவைச் செய்தியாக்கி உண்மையான செய்தி களை ஒதுக்குவது என்பது இங்கே ஒருவித கலையா கவே வளர்க்கப்பட் டிருக்கிறது.

அதனால் தான் கமல் ஹாசன் தன் வீட்டை விற்பேன் என்று மிரட்டுவது முதல்பக்க தலைப்புச் செய்தியாகிறது. ரஜினிகாந்த் மனைவியின் சொத்துக்கள் ஏலத்துக்கு வரலாம் என்பது அதை விடப் பெரிய செய்தியாகிறது. ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின், சுமார் 25000 தொழிலாளர்களை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உட னடியாக பாதிக்கும், நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலம் அநியாயத் துக்கு வீணாகும் செய்தி முதல் பக்கத்துக்கு வரா மல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார பலங்களில் ஒன்றான தயாரிப்புத் துறைக்கு இதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு குறித்து எந்த விவாதமும் இதுவரை ஊடகங்களில் உரிய முறையில், உரிய அளவில் முன்னெடுக்கப் பட வில்லை.

உண்மையான செய்தியைக் கவனமாக புதைத்துவிட்டு, அதை மறைப்பதற்கு ஊருக் கெல்லாம் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கி றோம்   ஊடகங்களில்.

உண்மையை சொல்வ தானால் இன்றைய நிலை யில் தமிழ்நாட்டு ஊட கங்களுக்கு வெளியார் தணிக்கை என்று பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எழும் சிறு சிறு சலசலப்புகளைத் தவிர. மாறாக தமிழ் நாட்டு ஊடகங்களின் உண்மையான பிரச்சினை இந்த சுய தணிக்கை முறை தான். ஊடகசுதந்திரத் திற்கு வெளி ஆபத்து இல்லை. உள் ஆபத்தே உண்மையான பேராபத்து.

(மோகன் குருசாமி முகநூலிலிருந்து)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.