உலகிலேயே மிகப்பெரிய தீவிரவாத நடவடிக்கைகளை கொண்ட அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் விளங்குகிறது என அமெரிக்காவில் இயங்கி வரும் இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் (Risk Management and Consulting Company) வெளியிட்டுள்ளது. மேலும் உலகிலேயே மிகப்பெரிய தீவிரவாத இயக்கம் RSS என்றும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இந்த இயக்கம் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், மதசார்பற்ற பண்முகதன்னமை உடைய நாட்டின் அடையளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை நாட்டில் விதைத்து வருவதாகவும் அந்நிறுவனம் குறை கூறுகிறது.
மேலும் 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RSS இயக்கம் அதன் உறுப்பினர் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்யப்பட்ட பின் 1948 ஆம் ஆண்டு RSS தடை செய்யப்பட்டதாகவும் பின்னர் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பதும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment