கடப்பா : ஆந்திராவில் "கிஸ்ஸிங் பாபா" என்று தன்னை அழைத்துக் கொண்ட போலிச் சாமியார் ஒருவரை அம்மாநில காவல்துறை வியாழனன்று கைது செய்தது.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள், உடல்நிலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர்களைக் கட்டியணைத்தல் மற்றும் அவர்களை முத்தமிடுதல் போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியானது.
கடப்பா மாவட்டம் பொரட்டட்டூரில் அய்யப்பன் கோயில் அருகே இருந்து இதைச் செய்து வந்த முத்தபாபாவை ஆந்திர காவல்துறையினர் வியாழக்கிழமை காலையில் கைது செய்து கமலாபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். ஜனவரி 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் கடப்பா மன நிலை மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment