மீரட்: மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்ட நடத்தப்பட்ட பூஜை குறித்து விசாரணை நடத்த உ.பி. காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்திருந்தது. இவ்விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.
இதற்கிடையே இந்த கோவில் கட்டும் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் நவ்நீத்சிங் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment