மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். தனது 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள சகாயத்திடம் புதியதாக ஒரு சில ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தெரிகின்றது.
பொதுப்பணித்துறை, கனிமவளத் துறை அதிகாரிகளிடம் அவர் நேற்று மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சகாயம் அவர்களிடம் விசாரித்த போது, கிரானைட் முறைகேடு தொடர்பான பல கோப்புகளை சகாயத்திடம் அளித்துள்ளனர். மேலும் சில அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணையில் 315 பேர் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. மூன்றாவது கட்ட விசாரணை வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற இரண்டாவது கட்ட ஆய்வின் போது கிரானைட் குவாரிகளில் கள ஆய்வு மேற்கொண்ட சகாயம், இன்றும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மேலும், நடுக்காட்டுக்குள் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு பங்களாவை ஆய்வு செய்த சகாயம் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றியுள்ளாராம். அதில் முக்கியமான டைரி ஒன்று சிக்கியுள்ளது. சகாயத்தின் கையில் சிக்கிய டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள், பிரான்ஸ், இத்தாலி உட்பட வெளிநாட்டில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் தொடர்புகள், பினாமி குவாரிகளின் பட்டியல் என அந்த டைரி முழுவதும் பி.ஆர்.பிக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாம்.
சகாயத்திற்கு டைரி சிக்கிய அந்த அலுவலகம் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment