பாஜகவில் சேர தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்தும், அவர் சேர மறுப்பதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினியை தங்களது கட்சியில் சேர வைக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் போட்டிப் போட்ட வண்ணம் உள்ளது.
இதில் குறிப்பாக பா.ஜ.க ரஜினிகாந்த் பாஜகவில் சேரப் போவதாக சிலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் பாஜகவில் சேருவது இயலாத காரியம், ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்காது என்பதையும் அவர் தெளிவாகச் தெரிவித்துள்ளார்.
எனினும் ரஜினிக்கு பெரும் தொகை கொடுக்க பாஜக பேசி வருகிறது. பா.ஜ.காவின் இந்த வதந்திகளால் ரஜினியின் ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் ரஜினிக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது, இந்த நிமிடம் வரை பாஜகவில் சேரும் நினைப்போ, அதுபற்றிய பேச்சு வார்த்தையோ கூட ரஜினிக்குப் பிடிக்கவில்லை.
அவர் எந்தக் காலத்திலும் பாஜக அல்லது வேறு கட்சிகளில் சேரமாட்டார். ஒரு பேச்சுக்குக் கூட அவர் யாரிடமும் இதை விவாதித்ததில்லை.
அப்படி ஒரு வேளை அவர் அரசியலுக்கு வருவதாகவே இருந்தாலும், அவர் தனியாகத்தான் வருவார் என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment