Latest News

தொண்டையை குத்திய கம்பி… சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்…!


உணவு அருந்துவதற்கு பயன்படும் உலோக குச்சிகள் குரல் வளையை ஊடுருவிய நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

வுஹான் நகரைச் சேர்ந்த ஜுன் சியா என்ற மேற்படி சிறுவன் தனது பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு அண்மையிலிருந்த நூடில்ஸ் உணவகமொன்றிலிருந்து உணவை வாங்கித் திரும்பிய வேளை சக மாணவன் ஒருவனது பெற்றோரின் ஸ்கூட்டரால் மோதுண்டான்.

இதன் போது நிலத்தில் விழுந்த ஜுன் சியாவின் குரல் வளையில் அவன் வைத்திருந்த உணவு உண்ணும் குச்சிகள் குத்தி ஊடுருவிச் சென்றன. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜுன் சியாவுக்கு உணவுக் குச்சிகளை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உணவுக் குச்சிகள் அதிசயிக்கத்தக்க வகையில் குரல்வளையிலிருந்து பிரதான குருதிக் குழாய்கள் எதனையும் சேதப்படுத்தாததால் அவன் உயிர் பிழைத்துள்ளான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.