Latest News

  

உலகின் காஸ்ட்லி போலீஸ் கார்கள்!

கார் என்பது, அதன் உரிமையாளர்களின் கௌரவத்தைப் பறைசாற்றக்கூடிய அம்சம். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒரு நாட்டுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீர்களா? காவல்துறையினர் பயன்படுத்தும் கார்களை வைத்தே, அந்தந்த நாடுகளின் ஸ்டேட்டஸைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் காஸ்ட்லி கார்கள் கொண்ட காவல்துறையின் லிஸ்ட் இது…
துபாய்

சென்ற ஆண்டு வரை ஆஸ்டன் மார்ட்டின் கார்களை பயன்படுத்தி வந்த துபாய் காவல்துறை, 4 சீட்டர், அதிநவீன வசதிகள் கொண்ட ஃபெராரி FF மாடலை லேட்டஸ்ட்டாக வாங்கியிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இதில், V12 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. இது ஆல் டைம் ஆல் வீல் டிரைவ் என்பதால், ஆன் ரோடு, ஆஃப் ரோடு, துபாயைச் சுற்றியுள்ள பாலைவன ஏரியா, அவ்வளவு ஏன் – பனிச் சறுக்குகளில்கூட மின்னல் வேகத்தில் குற்றவாளிகளை சேஸ் செய்ய உதவும். ஏற்கெனவே லம்போகினி அவென்டடார் கார்களும் இவர்களிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்களை வைத்து துபாய் தெருக்களில் பறப்பார்களோ!
இத்தாலி

இத்தாலி போலீஸ்காரர்கள், எப்பொழுதுமே ரஃப் அண்டு டஃப்பாக இருக்கும் டெரர் குரூப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குணத்துக்கு ஏற்றபடி வேகத்திலும், பெர்ஃபாமென்ஸிலும் ஈடு கொடுக்கக்கூடியது லோட்டஸ் இவோரா எஸ். இத்தாலியில், போலீஸ் ட்ரெயினிங்கின் குட் புக்கில் இருக்கும் ஜாம்பவான்கள்தான் ராணுவத்தில் ஜவான்களாக முடியும். பிரிட்டிஷ் நிறுவனத்தைச் சேர்ந்த கார் கம்பெனிதான் லோட்டஸ். இதுவும் 4 சீட்டர் கார்தான். ஆனால், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இதில் இருப்பது டொயோட்டாவின் இன்ஜின். சூப்பர் சார்ஜ்டு இன்ஜின் என்றால், 350bhp பவர். மணிக்கு 350 கி.மீ வேகம் வரை பறக்கும். மேலும், ஏற்கெனவே லம்போகினி கலார்டோ கார்களையும் பயன்படுத்தி வரும் இத்தாலி காவல்துறைக்கு, லேட்டஸ்ட்டாக அதே கலார்டோ கார்களில் ஹூராக்கன் எனும் மாடலை காவல்துறைக்கென மாடிஃபை செய்து பரிசளித்திருக்கிறது லம்போகினி நிறுவனம். இதுவும் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பறக்கும்.
லண்டன்

கிட்டத்தட்ட ஃபார்முலா ரேஸ் கார் டைப் மாடல்தான் ஏரியல் ஆட்டம். முழுக்க லேசான பாகங்களால் தயாரிக்கப்படும் இதன் மொத்த எடையே 550 கிலோதான். எனவே, இதில் பயணித்தால் காற்றில் மிதக்கும் அனுபவம் உணரலாம். 500bhp பவர்கொண்ட இந்த ஏரியல் ஆட்டம் V8, 0 – 60 கி.மீ  வேகத்தை வெறும் 2.3 விநாடிகளில் கடக்கும்.

இது தவிர, ஜாகுவார் XF காரும் சைரன் ஒலியுடன் லண்டனில் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறது. 271bhp பவர் கொண்ட இது, 0-60 கி.மீ வேகத்தை 6.4 விநாடிகளில் கடக்கும். லண்டனில்  வேலைக்குச் சேரும் போலீஸ்காரர்களுக்கு முதன்முதலில இந்த ஜாகுவாரில்தான் ட்ரெயினிங் நடக்குமாம். இது போக, மாநாடு, ஊர்வலம் போன்ற அமைதியான விஷயங்களுக்கு, மென்மையாக ஃபெராரியிலும் பறக்கிறார்கள் லண்டன் காவல்துறையினர்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அழகான சின்ன நாடு. உலகில் அதிகமாக விற்பனையாகும் டொயோட்டா கரோலா ஆல்டிஸ் கார்களை, சிங்கப்பூரில் அதிகம் பார்க்கலாம். மேலும் சுபாரு, பென்ஸ், மஸ்தா போன்ற கார்களும் சிங்கப்பூர் காவல்துறையின் ஃபேவரைட் வாகனங்கள். லேட்டஸ்ட்டாக லம்போகினி கார்கள், சைரனுடன் சிங்கப்பூர் வீதிகளில் ட்ரையல் அடித்துக் கொண்டிருக்கின்றன.



அமெரிக்கா

ஃப்ளோரிடா மாகாணத்தில் டாட்ஜ், டெக்ஸாஸில் செர்வலே கேமரோ, மிச்சிகனில் கெடில்லாக் CTS-V, நியூயார்க்கில் செவர்லே இம்பாலா, கேப்ரைஸ், ஃபோர்டு மஸ்டாங், எஸ்கேப், லெக்ஸஸ் என்று வெரைட்டியாக போலீஸ் கார்களை அமெரிக்காவில் பார்க்கலாம். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் தாயகம் என்பதால், இங்கு பெரும்பான்மையாக ஃபோர்டு மற்றும் செவர்லே கார்களுக்குத்தான் முன்னுரிமைபோல!

ஜெர்மனி

நம் ஊரில் திரியும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற பாதி பிராண்டுகள் ஜெர்மன் நாட்டுத் தயாரிப்புதான். ஜெர்மனியில் சொல்லவா வேண்டும்? சாதாரண சிட்டி பேட்ரோலுக்கு ப்ராபஸ் சி.எல்.எஸ். ராக்கெட் என்னும் ஜெர்மன் தயாரிப்பு காரைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்துகின்றனர். இது பென்ஸ் இன்ஜினை மாடிஃபை செய்து உருவாக்கப்பட்ட கார். இதுபோக, போர்ஷே 911 கார்களும் அடிக்கடி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கின்றன. விஐபிக்கள் பங்குபெறும் ஊர்வலங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்குக் கலந்துகொள்ளும் ஆடி R8 GTR கார்கள், பார்ப்பதற்கே அம்சமாக இருக்கும். R8தான் கிரிமினல்களைப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. V10 சிலிண்டர் கொண்ட 5.2 லிட்டர் இன்ஜின் கொண்ட இது, 0-100 கி.மீ-யை வெறும் 3.2 விநாடிகளில் கடக்கும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.